நள்ளிரவில் உடலில் ஒட்டுதுணி கூட இன்றி இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. ராம்பூர் பகுதிக்கு அருகில் உள்ள மிலக் எனும் கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவில், கடந்த 30ம் தேதி அதிகாலை நேரமான 1.38 மணிக்கு சாலையில் இளம்பெண் ஒருவர், உடலில் ஆடைகள் எதுவுமின்றி தலை விரிகோலத்தில் நடந்து வந்துள்ளார்.


ஒரு வீடியோவில் எந்தவித சலனமும் இன்றி சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் அந்த பெண், மற்றொரு வீடியோவில் சற்றே பதற்றத்துடன் காணப்படுகிறார். அங்கிருந்த ஒரு வீட்டில் காலிங் பெல்லை அடித்துள்ளார். அனால், அவர்கள் வெளியே வருவதற்குள்ளேயே அந்த பெண் அங்கிருந்து சென்றுள்ளார். இதேபோன்று, அடுத்தடுத்த வீடுகளிலும் அந்த பெண் காலிங் பெல்லை அடித்ததாக கூறப்படுகிறது.


துரத்திச் சென்ற பைக்குகள்:


இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த ஒருவர் பேசும்போது, ”குறிப்பிட்ட அந்த பெண் பார்ப்பதற்கு 20-லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார். அந்த பெண் எனது வீட்டை கடந்து சென்றதும், இரண்டு பைக்குகள் அவளை பின் தொடர்ந்து சென்றன. அதை தொடர்ந்து, காவல்துறை வாகனம் ஒன்றும் அவர்களை பின்தொடர்ந்ததை சிசிடிவி காட்சியில் கண்டேன்” என விளக்கமளித்துள்ளார்.


சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்:


கடும் குளிருக்கு மத்தியில் இளம்பெண் ஆடைகளின்றி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த வீடியோவை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும், சிலர் அந்த பெண்ணின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். ஒரு சிலர் அந்த பெண் மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என்று கூறினர். அந்த பெண்னை உடனடியாக கண்டுபிடித்து, அவருக்கு தேவையான உதவிகளை காவல்துறை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


காவல்துறை விளக்கம்: 


புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.  மேலும், இதுபோன்று யாரேனும் ஆடைகள் இன்றி சாலையில் நடந்து சென்றால், உடனடியாக அவர்களுக்கு ஆடை ஏதேனும் வழங்குங்கள். தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க உடனடியாக காவல்துறையை அணுகவும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதோடு, சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.