இராஜஸ்தானின் ஊராட்சித் துறை அமைச்சர் (Sainik Welfare and Panchayati Raj) இராஜேந்திர குதா (Rajendra Gudha) மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராஜஸ்தான் மாநிலம் சிகார் (Sikar) மாவட்டத்தின் கக்ரானா (Kakrana) பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் துர்கா சிங் (Durga Singh) கடத்தப்பட்டது தொடர்பாக ராஜேந்திர குதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக துர்கா போலீசாரிடம் அளித்த புகாரின் விவரம்: 


கடந்த ஜனவரி மாதம் 27, ஆம் தேதி கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னை கடத்தியதாக அமைச்சர் உட்பட இரண்டு பேரின் மூது துர்கா புகார் அளித்துள்ளார்.


இராஜேந்திர குதா, அவரது உதவியாளர் கிருஷ்ண குமார், விம்லா கன்வார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதால், சி.பி.சி.ஐ.டி. இதில் விசாரனை மேற்கொள்ள இருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். 


இந்த வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் முடிவில், நிலம் தொடர்பான பண பரிவர்த்தனையில் அமைச்சருக்கும் பஞ்சாயத்து உறுப்பினருக்கு இடையே பிரச்சினை எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


ராஜேந்திர குதா கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் (Bahujan Samaj Party (BSP)) சார்ப்பில் போட்டுயிட்டு வெற்றி பெற்ற ஆறு எம்.எல்.ஏ.க்களில் ஒருவராவர். பின்னர், இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அசோக் கெக்லட் ( Ashok Gehlot) அமைச்சரவையில் இருக்கிறார். 




மேலும் வாசிக்க..


OPS: "நடப்பது எல்லாம் நன்மைக்கே.." உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


AIADMK Case: இ.பி.எஸ்.சின் வேட்பாளரை ஏற்க தயார் என்ற ஓபிஎஸ் தரப்பு..! ஓ.பி.எஸ்.யே நாங்கள் ஏற்கவில்லை என்ற சி.வி. சண்முகம்..!