தமிழ்நாடு: 



  • கனமழை காரணமாக தஞ்சை,புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

  • அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நேற்று, சென்னை அண்ணா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை முதல்வர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

  • அதிமுகவின் பொதுக்குழுவில் வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் -  உச்சநீதிமன்றம் உத்தரவு

  • நாளை தமிழ்நாடு முழுவதும் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. 

  • அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ‘ நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

  • பிப். 7 தேதிவரை கால அவகாசம் இருப்பதால் பாஜக நிலைப்பாடு குறித்து அப்போது அறிவிக்கப்படும் என சி.டி. ரவி தெரிவித்துள்ளார். 

  • ஈபிஎஸ் , ஓபிஎஸ் என இருவரையும் அடுத்தடுத்து சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

  • இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படவில்லை -  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில். 

  • அனைத்து துறைகளின் அனுமதியை பெற்ற பின்னரே பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் -  தமிழ்நாடு அரசு 

  • ஈவிகேஎஸ் இளங்கோவன், ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல்.

  •  அதிமுகவை ஒருங்கிணைக்கும் நேரம் நெருங்கிவிட்டதாக  சசிகலா பேட்டி

  • திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம். 


இந்தியா:



  • அதானி விவகாரத்தினை எழுப்பி எதிர் கட்சிகள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல். வரும் பிப்,6ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 

  • முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. 


உலகம்:



  • அமெரிக்க வான் எல்லையில் பறந்த சீன பலூன் - உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு

  • உளவு பார்க்க பலூன் பறந்ததாதால் சீன சுற்றுபயணத்தினை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரத்து. 

  • தெற்கு சூடானில் மேய்ச்சல் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்


விளையாட்டு:



  • அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா அறிவிப்பு


  • மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ம் தேதி நடைபெறும் என தகவல் 




  • அஸ்வினை  எதிர் கொள்ள ஆஸ்திரேலிய அணி புது வியூகம் இணையத்தில் வைரலாகும் வீடியோ