உத்தரப் பிரதேசத்தின் நடுரோட்டில் பள்ளி மாணவிகள் இருவர், தலைமுடியை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேசம் பாக்பத் நகரில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர்  ஒருவரையொருவர் அடித்து உதைத்துக் கொண்டுள்ளனர். இருவரும் தங்கள் பள்ளியில் படிக்கும் ஒரே பையனை விரும்புவதாகவும் அது தெரிய வந்ததை தொடர்ந்து மாணவிகள் சண்டையிட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.


தலைமுடியை பிடித்து அடித்து கொண்ட பள்ளி மாணவிகள்:


சிங்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அமிநகர் சராய் டவுனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது, வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்திருக்கும் இரண்டு பெண்கள், ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குகின்றனர். உதைக்கின்றனர். மற்ற மாணவர்களும் வழிப்போக்கர்களும் அவர்களைப் பிரிக்க முயற்சிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


உபியில் பரபரப்பு:


உள்ளூர் பள்ளியில் இருவரும் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் படிக்கும் பையனை இருவரும் விரும்புவதாக கூறப்படுகிறது. இரண்டு மாணவிகளும் அந்த பையனுடன் அடிக்கடி பேசுவார்கள். இருவரும் அவரை விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும் பள்ளிக்கு வெளியே சண்டை போட்டு கொண்டுள்ளனர்.


இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி பேசுகையில், "இந்த வீடியோவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்" என்றார்.


சமீபத்தில், உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் வரதட்சணை தராததால் மணமகன் கல்யாண மண்டபத்திலிருந்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதையும் படிக்க: Jai Shriram Violence : ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை சொல்ல சொல்லி கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு...மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இஸ்லாமியர்...உத்தர பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி