வரும் 15ஆம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைய உள்ளது. 17 ஏ ஸ்டெல்த் பிரைகேட் வகை போர்க்கப்பலான நீலகிரி, 15 பி ஸ்டெல்த் டெஸ்ட்ராயர் (தாக்கி அழிக்கும்) போர்க்கப்பலான சூரத், ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பலான வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்கள், இந்திய கடற்படையில் வரும் 15ஆம் தேதி இணைகின்றன.


இந்த வரலாற்று நிகழ்வு இந்திய கடற்படையின் போர் திறனுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் அதே வேளையில், உள்நாட்டிலேயே கப்பலை உற்பத்தி செய்வதில் நாட்டின் தலைசிறந்த தொழில் திறன் நிலையை அடிக்கோடிட்டும் காட்டுகிறது.


இந்திய கடற்படையின் வரலாற்றில் மைல்கள்:


இந்த மூன்று கப்பலகளும் மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, பாதுகாப்பு உற்பத்தியின் முக்கியமான களத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்புக்கு ஒரு சான்றாகும்.


இந்த மேம்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் இயக்கம், போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இது, பாதுகாப்பு உற்பத்தியில் உலகளாவிய தலைமையகமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறது.


நீலகிரி, சூரத் மற்றும் வாக்சீர் ஆகியவற்றை ஒருங்கிணைந்து இயக்குவது பாதுகாப்பு, தற்சார்பு மற்றும் உள்நாட்டு கப்பல் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவின் இணையற்ற முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.


மெர்சல் காட்டும் நீலகிரி போர்க்கப்பல்: 


இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் கடற்படையின் கடல்சார் வலிமையை மேம்படுத்துவது மட்டுமின்றி, பாதுகாப்பு உற்பத்தி, தற்சார்பு ஆகியவற்றில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் அடையாளப்படுத்துகிறது.


 






இது, இந்திய கடற்படைக்கும் ஒட்டுமொத்தமாக தேசத்திற்கும் பெருமையான தருணமாகும். இது ஒரு வலுவான மற்றும் தன்னிறைவு பாதுகாப்பு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்