உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 'டான்' என்ற நாய் அதன் பணிக்காலம் முடிவடைந்ததால் புதிய உரிமையாளருக்கு ஏலம் விடப்பட்டது. 'டான்' கடந்த 6 ஆண்டுகளாக ஆர்பிஎப்-க்கு உதவி செய்தது. ரூ. 10,550-க்கு ஏலம் விடப்பட்டு புதிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு இத்தனை ஆண்டுகளாக உதவிய டான் நாய்க்கு இன்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. ஆர்பிஎஃப் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகளில் டான் எங்களுக்கு மிகவும் உதவியுள்ளது. அவனை பிரிவதால் சோகத்தில் இருக்கிறேன்" என்றார்.


ரூ.6ஆயிரத்துக்கு அடிப்படை ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. கோவர்தன் செளராஹா பகுதியைச் சேர்ந்த வருண் சக்ஸேனா ரூ.10550 க்கு டானை ஏலத்தில் எடுத்தார்.


அவர் கூறுகையில், " நான் ஏற்கனவே டானை பார்த்திருக்கிறேன். டான் ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக செய்தியை அறிந்து உடன், நானே வாங்க முடிவு செய்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவன் நல்ல டிரைனிங் கொடுக்கப்பட்டு இருப்பவன். எனது குடும்ப உறுப்பினர் போல் நான் அவனை பார்த்துக் கொள்வேன்" என்றார். டானை குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


டானுக்கு மாலை அணிவித்து வரவேற்பது போன்று வீடியோவில் உள்ளது. அத்துடன், உரிமையாளர் சொல்வது அனைத்தையும் டான் கேட்டு அப்படியே செய்கிறது.






லேபரேடர் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த இந்த டான், மூன்று மாத குட்டியாக இருக்கும்போது ஆர்பிஎஃப் வாங்கியது. அதாவது 2015ஆம் ஆண்டில் ஆர்பிஎஃப் வாங்கியது. தமிழ்நாட்டிற்கு தான் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 


சட்டம் - ஒழுங்கை மீறும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஐ.ஜி அஸ்ரா கர்க்


தமிழ்நாட்டில் 6 மாதங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. டானை பராமரிக்க மாதந்தோறும் ரூ.10,000 செலவாகும். டானின் முதுகில் ஏதோ பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவராக அது ஃபிட்டாக இல்லை என்று கூறப்பட்டுவிட்டது. இதையடுத்து ஆர்பிஎஃப் இல் இருந்து டான் விடுவிக்கப்பட்டது.