தமிழ்நாடு :



  • டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வு தேதி வெளியீடு : இன்று முதல் செப். 21 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

  • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

  • காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 2. 250 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து

  • கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும் : கல்வி ஆணையர் அறிவுறுத்தல் 

  • உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆக. 30 ல் ஆலோசனை 







  • இனி பொறியியல் மாணவர்கள் 2 பட்டங்களை பெற முடியும் : புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது அண்ணா பல்கலைக்கழகம்

  • ஆத்தூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து : 11 வயது சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக பலி

  • LGBT பிரிவினரை கண்ணியமான முறையில் குறிப்பிடும் வகையிலான சொல்லகராதியைத்(LGBT Glossary) தமிழக அரசு தாக்கல் செய்தது


இந்தியா :



  • சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக எம்.எல்.ஏ கைது : கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

  • முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண், தனது பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • 'கடவுள் உயர் சாதி இல்லை; பெண்கள் யாருமே பிராமணர்கள் அல்ல'- ஜேஎன்யூ துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை

  • கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் :  மகாராஷ்ட்ரா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

  • டிக் டாக் பிரபலமும், பாஜக நிர்வாகியுமான சோனாலி பஹாத் மாரடைப்பு காரணமாக நேற்று முன் தினம் இரவு காலமானார்.


உலகம் : 



  • இருசக்கர வாகனத்தில் சென்ற மாலத்தீவு அமைச்சரை வழிமறித்து கத்தியால் குத்த முயற்சி

  • டாம் ஹாலேண்ட், ஜெண்டயா, டோபி மேக்குயர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன்-நோ வே ஹோம் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுவதாக தகவல்

  • பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரீன் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என ஆய்வில் தகவல்


விளையாட்டு : 



  • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.