Food Poison: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்:
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே பரோலா கிராமத்தில் கல்லூரி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ராவா மாவில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட விடுதியில் உள்ள மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனால், அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சுமார் 76 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உள்ளூர் உணவு பாதுகாப்பு துறை குழுவினர் தனியார் விடுதியில் ஆய்வு செய்வதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகையில், "மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் மாதிரிகளை குழு சேகரித்தது. மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன்படி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது வரை அனைத்து மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளது”என்று கூறினார்.
என்ன காரணம்?
சில மாணவர்களுக்கு நள்ளிரவில் உடல் நடுங்கியது. எனக்கு காய்ச்சலும் தலைச்சுற்றலும் ஏற்பட்டது. பின்னர் என்னுடன் எனது தோழர்கள் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டோம். எனது விடுதியில் இருந்த சிலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது” என்று கூறினார். சிவராத்திரியை முன்னிட்டு வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.