Sela Tunnel: உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி; சிறப்பம்சங்கள் என்ன?
Sela Tunnel: சுமார் 13,000 அடி உயரத்தில் உள்ள செலா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Sela Tunnel : அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அனைத்து வானிலையையும் தாங்கக்கூடிய, சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையிலான சுரங்கப்பாதையை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
சிறப்பம்சங்கள்:
செலா சுரங்கப்பாதையானது, ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
மழை, குளிர், வெயில் உள்ளிட்ட வானிலைகளை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மிக உயர்தர பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. செலா சுரங்கப்பாதையானது,
13 ஆயிரம் அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல இராணுவத்தினருக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை திட்டமானது, வேகமான போக்குவரத்துக்கு உதவுவது மட்டுமன்றி, சீனாவுக்கு அருகில் உள்ளதால், இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என கூறப்படுகிறது.
சுமார் 13, 000 அடி உயரத்தில் உள்ள சுரங்கப்பாதையானது, உலகத்தில் உள்ள நீளமான இரட்டைப் பாதையுடைய சுரங்கப்பாதை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”வாக்குகளை கவர்வதற்காக அல்ல”:
அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடகிழக்கு மாநிலங்களுக்கு 55,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அருணாச்சல் பிரதேச முதலமைச்சர் பேம காந்து மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, :கடந்த கால ஆட்சியில் எல்லைப் பகுதி கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். இப்பொழுது கொண்டு வரப்படும் திட்டங்கள் எல்லாம், தேர்தலை அடிப்படையாக கொண்டு, வாக்குகளை கவர்வதற்காக அல்ல. நாட்டு நலனை கருத்தில் கொண்டே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
PM Modi in Assam : அசாமில் பிரதமர் மோடி.. யானைக்கு கரும்பு ஊட்டி நெகிழ்ச்சி! வைரலாகும் புகைப்படங்கள்