வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் சிக்கின. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றதுபோல் போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா மாவட்டதில் அஞ்சல் அலுவலக பணிகளில் சேர 500-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்கள் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, இதுவரை 2,500 சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் 1000-க்கும் மேற்பட்டவை போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 300-க்கும் மேற்பட்ட நபர்கள் போலி சான்றிதழ் கொடுத்து தமிழ்நாடு அஞ்சலங்களில் பணிபுரிந்து வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எழுத்து தேர்வுகள் இன்றி பள்ளி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணிகளில் போலி சான்றிதழ் அளித்து சேர்ந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்