தமிழ்நாடு:



  • சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் : சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு 

  • அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை : தமிழ்நாடு அரசு எச்சரிக்கை 

  • திருநங்கையருக்கு ரூ.1000 மாத உதவித்தொகை வழங்க வேண்டும் : உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை 

  • பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதில் முன்பு போல பாட்டிலில் ஏன் விற்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி 

  • ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி அடிக்க சென்ற மாணவர்கள் சஸ்பெண்ட்

  • 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு 


இந்தியா :



  • 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ?: மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை 

  • எப்போதும் தேசத்திற்கு முன்னுரிமை தாருங்கள் : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

  • பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் 'பான் மசாலா' விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். ‘புகையிலை பொருட்களின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்'  என்று தெரிவித்தார்.

  • மின்னணு இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு 


உலகம் :



  • ஆப்கானிஸ்தானில் மசூதியில் உள்ளே நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் 

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணம் அமெரிக்க எம்பிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் 

  • உக்ரைன் நாட்டின் உள்ள மரியுபோலை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு 

  • இந்தியா- ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் மே 1 ம் தேதி அமலுக்கு வருகிறது.


விளையாட்டு : 



  • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  • ஐபிஎல் தொடரில் ஆடம் மில்னேவுக்கு மாற்றாக, இலங்கையைச் சேர்ந்த இளம் பௌலரான மதீஷா பதிரானாவைக் களமிறக்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

  • இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண