கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு அருகே உள்ள எரிமேலியில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது.


கேரளாவில் கடந்த வாரம்  மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் பெய்த  கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலர் உயிரிழந்தனர்.


இந்த நிலையில், அந்த மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை தொடர்ந்து எருமேலி ஊராட்சிக்கு உட்பட்ட ஏஞ்சல் பள்ளத்தாக்கில் 3 இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏஞ்சல்வேலி சந்தி, பள்ளிப்பட்டி மற்றும் வலையத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டன. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை குழு அப்பகுதிக்கு சென்று மீட்பு பணிய்ல் ஈடுபட்டனர். மூன்று வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. சிபிஎம் மாநாட்டு மையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. தண்ணீர் வரும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெள்ள நீரில் பல இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. ஏஞ்சல் பள்ளத்தாக்கு சபரிமலை வனப்பகுதிக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்து வருவதால் பல இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


 



முன்னதாக, சமீபத்தில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் முண்டகாயத்தில்பெய்த மழையின் போது மணிமாலா ஆற்றின் கரையின் ஓரத்தில் இருந்த இரண்டு மாடி வீடு திடீரென சில வினாடிகளில் ஆற்றில் இடிந்து விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அக்டோபர் 17ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வீட்டின் குடியிருப்பாளர்கள் வீடு இடிந்து விழுமுன் வெளியேற்றப்பட்டனர்.






 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண