உத்தரப் பிரதேசத்தில் முதியவர் ஒருவரை பெண்களை வைத்து மயக்கி கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது. அவரை மீட்ட காவல்துறை ஒரு பெண் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.
பெண்ணை வைத்து மயக்கும் கும்பல்:
பாதிக்கப்பட்டவரின் பெயர் லல்லு சௌபே. கடந்த வியாழக்கிழமை முதல் ஜான்சியில் இவரை அந்த கும்பல் பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அவரை விடுவிக்க ரூ. 3 லட்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. லல்லு சௌபேயின் மகன் காவல்துறையில் புகார் அளித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தந்தை கடத்தப்பட்டதாகவும், கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "கும்பல் கேட்ட தொகையில், 1 லட்சம் ரூபாய் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது. கடத்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் மகன் போல் கான்ஸ்டபிள் ஒருவர் மாறுவேடத்தில் சென்றுள்ளார். அந்த கும்பல் கேட்ட பணத்தை அளிக்க சென்றிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அவரை லல்லு சௌபே இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்:
போலீஸ் குழுக்கள் உடனடியாக அங்கு சென்று, சௌபேயை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட கிரண் (35), அகிலேஷ் அஹிர்வார் (30), மற்றும் சதீஷ் சிங் புந்தேலா (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, குற்றவாளிகள் தங்கள் சதி திட்டத்தை ஒப்பு கொண்டனர்.
முதலில் பெண்ணை வைத்து ஆணுக்கு தொலைபேசியில் பேச வைக்கிறது அந்த கும்பல். பின்னர், தொலைபேசியில் மயக்கி ஒரு இடத்திற்கு வர வைக்கிறது. அதேபோலதான் சௌபேயை ஜான்சிக்கு வர சொல்லி இருக்கிறார்கள். அங்குதான் அவர்கள் அவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுபோல், பலரை பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்" என்றார்.
இதையும் படிக்க: Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 ஆம் ஆண்டு பாடம் புகட்டுவோம்' - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!