உத்தரப்பிரதேசத்தில் புதிய சாலையை தேங்காய் உடைத்து பாஜக எம்எல்ஏ திறந்து வைத்தபோது, தேங்காய் உடையாமல் சாலை உடைந்து சிதறியது.


உத்தரபிரதேச மாநிலம்  பிஜ்னூரில் கெடா கிராமத்திற்கு அருகே புதிதாக கட்டப்பட்ட சாலையின் ஒரு பகுதியில், அதன் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சுசி சவுத்ரி சாலை மீது தேங்காய் உடைத்தார். அப்போது, சாலை உடைந்து ஜல்லிகள் உதிர்ந்துவிட்டன, ஆனால் தேங்காய் அப்படியே இருந்தது. அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது.


சம்பவ இடத்திலேயே இருந்த எம்எல்ஏவின் கணவர் மௌசம் சவுத்ரி, புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மண்வெட்டியைப் பயன்படுத்தியபோது, ​​மேற்பரப்பு சிதையத் தொடங்கியது. இந்த சம்பவத்தால் வருத்தமடைந்த சுசி சவுத்ரி தர்ணாவில் அமர்ந்து சாலையின் தரம் குறித்து அதிகாரிகளை திட்டினார். சிவந்த முகத்துடன், கட்டுமானத்தில் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினார்.


மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இந்த பாதை கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்த எம்எல்ஏ தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார். சாலையின் மாதிரிகளை சேகரிக்க அந்த இடத்தில் குழி தோண்டுவதற்கு அதிகாரிகளுக்கு சவுத்ரி உதவினார்.


 










“இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். சாலை தரமாக இல்லை என்று சொன்னேன். சாலையின் சிதறிய பாகங்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டன. இது முடியும் வரை நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கேயே இருந்தோம்” என்று எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறினார்.


இதற்கிடையில், பாசனப் பிரிவின் நிர்வாகப் பொறியாளர் விகாஸ் அகர்வால் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். மேலும் ஆய்வுக்காக மாதிரி எடுக்கப்பட்டதாகக் கூறினார்.  சாலை அமைக்க மொத்தம் ரூ.1.16 கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண