தமிழ்நாடு:


 


* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு தினம் இன்று. இதையொட்டி, அதிமுகவினர் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்


* அதிமுக உட்கட்சி தேர்தலின் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்தனர். எதிர்த்து போட்டியிட வந்த அதிமுகவினர் விரட்டியடிக்கப்பட்டனர்.


* தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்று பாதிப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


* தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


* முனைவர் பட்டம் தகுதி அளவிற்கு தமிழ் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை, தமிழகத்தில் தமிழக அரசு பணி செய்பவர்கள் அடிப்படை தமிழ் அறிவை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கபட்டுள்ளது என அமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


இந்தியா: 


* வங்கக்கடலில் உருவான ஜாவத் புயலின் தீவிரம் மற்றும் காற்றின் வேகம் குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் புயல் வலுவிழந்தது.


* முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா(88) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் நேற்று மரணமடைந்தார். 


* தென்னாப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் மகாராஷ்டிரா திரும்பிய நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது.


* உலகம் முழுவதும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகபட்ச சிசிடிவி கேமராக்கள் உள்ள 150 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் டெல்லி முதல் நகரமாக உள்ளது.


உலகம்:


* உலகிலேயே மிகவும் மதுபானத்தை அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.


* இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் ஊரை விட்டு வெளியேறினர்.


* பாகிஸ்தானில் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வாங்காமல் வேலைசெய்து வருவதாக தூதரக அதிகாரிகள் ட்விட்டர் மூலம் பிரதமர் இம்ரான்கானை கண்டித்த சம்பவம் வைரலானது.


* உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வார்டு பல்கலைக்கழகம்,தொழிலாளர் சங்க மாணவர்களுக்கு சாதி காரணமாக வேற்றுமைக் காட்டுதலுக்கு தடை விதித்துள்ளது.


விளையாட்டு:


* இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் சாதனை படைத்தார்.


* இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண