ஒரே வாரத்தில் பள்ளம்:


உத்தரப்பிரதேச மாநிலத்தில் பண்டல்கண்ட் விரைவுச்சாலையை, மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த வாரம், பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் பண்டர்கண்ட் பகுதியில், கடந்த புதன்கிழமை கனமழை பெய்தது. இந்த கன மழைக்கு தாக்கு பிடிக்காமல் பண்டல்கண்ட் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.






பண்டல்கண்ட் சாலை:


2020-ம் ஆண்டு பிப்ராவரி மாதத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட் விரைவுச் சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  அதையடுத்து, சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு, சுமார் 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த விரைவுச் சாலையானது,  14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில், 296 கி,மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்த சாலையானது, லக்னோ- ஆக்ரா விரைவு சாலையுடன் இணைகிறது. இச்சாலையானது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும், இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே வாரத்தில், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுமக்கள் குற்றச்சாட்டு:


இந்நிலையில், நேற்றிரவு பண்டல்கண்ட் விரைவுச் சாலையில் உள்ள சிரியா என்ற இடத்தில், இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மழைக்கு தாக்குப் பிடிக்காமல், ஒரே வாரத்தில் சாலை சேதமடைந்ததுள்ளது குறித்து, இது போன்ற ஊழலை பார்த்ததில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.


Also Read: Sri lanka protest: ரணிலின் முதல் நாள்.. போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு: கட்டுப்பாட்டுக்குள் வந்த அதிபர் அலுவலகம்


Also Read:Vice President Election 2022: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பெனர்ஜீ அறிவித்துள்ளார்.



 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண