உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இரண்டு மனைவிகள்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் தன்னை மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக நகரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்க வைத்துள்ளார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரில், “திருமணம் ஆனது முதலே என்னை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல வற்புறுத்தி வந்தேன். ஆனால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் தட்டி கழித்து கொண்டே வந்தார். இதையடுத்து எனது பெற்றோரும் என் கணவரிடம் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதால், கடந்த சில நாட்களாக தலைமறைவானார்.

தலைமறைவான என் கணவனை தேடி, நானும் எனது பெற்றோரும் என் கணவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றோம். அப்போதுதான் தெரிந்தது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தது” என்று தெரிவித்திருந்தார். 

மனைவிகள் மோதல்:

இதன்பின்னர் இந்த வழக்கானது நாரி உத்தன் கேந்திராவுக்கு கவுன்சிலிங்கிற்காக மாற்றப்பட்டது. இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இரண்டாவது மனைவி தன் கணவர் தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

முதல் மனைவியும் நான்தான் முதல் மனைவி சட்டப்படி என்னுடன் தான் அவர் இருக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபடத் தொடங்கினார்.  இந்த வழக்கு ஆலோசனைக்காக நாரி உத்தன் கேந்திராவுக்கு (சிவில் தகராறுகளைத் தீர்ப்பதில் காவல்துறைக்கு உதவும் தனியார் குழு) மாற்றப்பட்டது. 

மூன்று நாட்கள்:

இதையடுத்து, இருவரின் கோரிக்கையையும் கேட்டுகொண்ட அந்த குழு, ஒரு வினோதமான முடிவை எடுத்தது. அதன்படி, திங்கள் முதல் புதன் வரை கணவன் முதல் மனைவியுடன் இருப்பான். அதேசமயம், வியாழன் முதல் சனிக்கிழமை வரை, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பார். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கணவர் யார் வீட்டில் இருக்க விரும்புகிறாரோ அங்கே இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு இரண்டு மனைவிகளும் ஓகே சொல்லவே ஒப்பந்தம் செய்யப்பட்டு மூவரும் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர்.