தமிழ்நாடு:



  • தீர்ப்புகள் அனைத்தும் இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை.

  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் தலைமையே முடிவெடுத்ததாக அமைச்சர் முத்துசாமி தகவல்.

  •  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை விருப்ப மனு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமென அக்கட்சி பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

  • கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான், அக்கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் பின்னால் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • திருச்சி, திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் 300 சவரன் நகை கொள்ளை.

  • அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து தான் இந்திய அரசாங்கம் தொடங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இந்தியா



  • அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாமல் இருந்த 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.

  • மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பகத் சிங் கோஷியாரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தல்.

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை தைவானில் இருந்து இந்தியா கொண்டு வர உதவ வேண்டுமென அவரது மகள் அனிதா போஸ் கோரியுள்ளார்.

  • கோவா மாநில உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாதுகாப்பு நிலவரத்தை ஆராய்ந்தார்.

  • ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் ,தச்சூர் வரை 126 கி.மீ ஆறு வழிச்சாலைக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

  • மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதிகள் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


உலகம்



  • நேபாளத்தில் பொகாரா எனும் இடத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த ஐந்து இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

  • மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை தங்களின் பணி ஆட்களில் 6 சதவிகிதம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

  • 115 ஆண்டுகள் 322 நாள்கள் வாழ்ந்து வரும் மரியா பிரானியாஸ் மோரேரா என்ற பெண்மணி உலகின் வயதான பெண்மணி எனும் புதிய சாதனையை படைத்துள்ளார். 


விளையாட்டு



  • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது எழுப்பப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • இந்தியா- நியூசிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது