75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விநோதமான உத்தரவுகளை பாஜக அரசு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், தொலைபேசி அழைப்பு வரும்போது இனி அரசு அலுவலர்கள் ஹலோ சொல்லக் கூடாது என்றும் வந்தே மாதரம்தான் சொல்ல வேண்டும் என்றும் மகாராஷ்டிர கலாசார அமைச்சர் சுதிர் முங்கண்டிவார் இன்று அறிவித்துள்ளார்.


 






இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று பாஜக அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்துள்ளார். சமீபத்தில், பொறுப்பேற்ற புதிய அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 






புதிய அறிவிப்பு குறித்து பேசிய சுதிர் முங்கண்டிவார், "ஹலோ ஒரு ஆங்கில வார்த்தை. அதை விட்டுவிடுவது முக்கியம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இந்தியனின் உணர்வு. நாம் சுதந்திரத்தின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அம்ரித் மஹோத்சவை (சுதந்திரம்) கொண்டாடுகிறோம். எனவே அலுவலர்கள் வணக்கம் என்பதற்கு பதிலாக தொலைபேசியில் 'வந்தே மாதரம்' என்று சொல்ல விரும்புகிறேன்.


சிவ சேனாவின் மூத்த தலைவரான ஷிண்டே பாஜகவுடன் இணைந்து கட்சியில் கலகம் ஏற்படுத்திய நிலையில், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜகவால் மகாராஷ்டிரா முதல்வர் பதவி வழங்கப்பட்டது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண