கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் வகுப்பறை நீச்சல் குளமாக மாறியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை நீச்சல் குளம் போல மாற்றியது அதில் மாணவர்கள் குதித்து மகிழ்ந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 


மாணவர்கள் வகுப்பறையில் தன்ணீரில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் வகுப்பறையில் 2 அடி அளவுக்கு நீர் நிரப்பப்பட்டுள்ளது. நீச்சல் குளம் போல காட்சியளிக்கும் அதில் மாணவர்கள் குதித்து ஆட்டம் போடுகின்றனர். வெப்ப அலை காரணமாக பல்வேறு பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டன. சில பள்ளிகளில் தேர்வுகள் இருப்பதால் அவை செயல்பட்டு வருகின்றன.


வெப்ப அலையில் தாக்கத்தை சமாளிப்பதற்காக மாணவர்களுக்காக ஆசிரியர் வகுப்பறையை தண்ணீரால் நிரப்பியுள்ளார். வகுப்பறையில் பென்ச் ஏதும் இல்லை. தண்ணீரை நிரப்பி மாணவர்கள் விளையாடுவதற்காக ஏற்பாடு செய்துள்ளார். அதில் மாணவர்கள் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






இந்த வீடியோவை பதிவிட்டவர் ” வகுப்பறையை தண்ணீரால் நிரப்பி மாணவர்களை அதில் விளையாட வைத்ததற்கு பள்ளி நிர்வாகம் காரணம் சொல்லியிருக்கிறது. அதில், பயிர் அறுவடை காலம் மற்றும் வெப்ப அலை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதை தவிர்க்கவே இந்த ‘ நீச்சல் குளம்’ தீம் வகுப்பறை.” என்று குறிப்பிட்டுள்ளார்.  


இந்த வீடியோவிற்கும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’பள்ளியில் நீச்சல் குளம் ஏற்படுத்தி தர வேண்டும்.’ பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.’ ‘சிறுவர்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பாருங்க.’ ‘இது நல்ல முன்னெடுப்பு’ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


’ கல்வி வேடிக்கையாகி விட்டது.’ ‘ என்னது இது? அழுக்கு தண்ணீரில் மாணவர்கள் விளையாடுகிறார்கள்.’ ‘இது நீச்சல் இல்லை. அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது பள்ளிதானே?’ என பலரும் எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். 


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் குடியரசு தின விழாவில் மாணவர்கள் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடியது குறித்து பலரும் எதிர்மறையான கருத்து தெரிவித்தனர்.