உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பாம்பு பிடிப்பதில் பிரபலமாக இருந்த ஒருவர் விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். தேவேந்திர மிஸ்ரா என்ற அந்த நபர், தனது கிராமத்தில் உள்ள பக்கத்து வீட்டில் இருந்து பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். அதிக விஷம் கொண்ட அந்த பாம்பை மீட்ட பிறகு, மிஸ்ரா அதை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு கிராமத்தை சுற்றி வந்துள்ளார்.






தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அந்த நபர் ஒரு குச்சியின் உதவியுடன் பாம்பை பிடிக்கும் காட்சி உள்ளது. மற்றொரு வீடியோவில் அவர் ஒரு பெண் குழந்தையின் கழுத்தில் பாம்பை போடுவதைக் காணலாம்.


மிஸ்ரா, அந்த பாம்பை பிடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரைக் கடித்துள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக பல்வேறு மூலிகைகளைக் கொண்டு பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க முயன்றதாக கிராம மக்கள் சிலர் கூறியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் தனது வீட்டில் இறந்து கிடந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு வினையாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பை விளையாட்டு தனமாக கழுத்தில் போட்டு சுத்திய நபர் உயிரிழந்துள்ளார். எவ்வளவு பயிற்சி எடுத்திருந்தாலும், பாம்பை கவனமாக கையாள வேண்டும். இப்படி, கவனக்குறைவாக இருந்த இதுபோன்ற சம்பவம்தான் நடக்கும்.


உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பாம்பு பிரச்னை மிக பெரிய பிரச்னையாக உள்ளது. முன்னதாக, பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். பவானிபூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனது சகோதரர் அரவிந்த் மிஸ்ராவின் (38) இறுதிச் சடங்குகளில் கோவிந்த் மிஷாரா (22) கலந்து கொண்டார்.


பாம்பு கடித்ததில் இவரும் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ராதா ராமன் சிங் கூறுகையில், "தூங்கி கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து கோவிந்த் மிஷ்ரா உயிரிழந்தார். அதே வீட்டில் இருந்த உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டே (22) என்பவரையும் பாம்பு கடித்துள்ளது. பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோவிந்த் மிஷ்ரா மற்றும் சந்திரசேகர் பாண்டே இருவரும் அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள லூதியானாவில் இருந்து கிராமத்திற்கு வந்தனர்.