2022-23 ஆம் ஆண்டுக்கான, புதுச்சேரியின் நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பல முக்கிய முடிவுகள், நலத்திட்டங்கள் அடங்கிய 10 ஆயிரத்து 692 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 


தாமதமான பட்ஜெட்:


வழக்கமாக பட்ஜெட்டானது ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தாக்கல் செய்யப்படும். ஆனால் புதுச்சேரியானது, ஒன்றிய பிரதேசம் என்பதால், மத்திய அரசிடம் நிதிக்கு ஒப்புதல் பெற்ற பின்னரே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியுள்ளது. சுமார் 11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு, புதுச்சேரி அரசு கோரியிருந்தது. இந்நிலையில் தற்போது, 10 ஆயிரத்து 692 கோடி மதிப்பிலான நிதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாகவே ஆகஸ்ட் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


 இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில், முக்கிய முடிவுகள் குறித்து கொள்வோம்



  • புதுச்சேரியில், 21 வயது முதல் 57 வயது வரையுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

  • தொகுதி மேம்பாட்டு நிதியாக எம்.எல்.ஏ-க்கு ரூ.1கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தப்படுகிறது

  • கோயில் ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

  • காரைக்காலில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசம் துறைமுகத்துக்கு, இந்தாண்டு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை-புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்

  • 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிப்பு

  • 10 ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக அரசு பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்

  • சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படும் என அறிவிப்பு




முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல செய்தவுடன், பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது. நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அதையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.