ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தானில் நிலநடுக்கம் :
ராஜஸ்தான் மாநிலம் பிகானேருக்கு வடமேற்கு பகுதியில் ,236 கிமீ தூரத்தில் பூமிக்கு 10 மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கள் கிழமை ) அதிகாலை சரியாக 2.01 க்கு பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.மிதமான நிலநடுக்கம் என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட தேசிய புவியியல் ஆய்வு மையம் “நிலநடுக்கம் ரிக்டர் அளவு: 4.1, 22-08-2022 அன்று ஏற்பட்டது, 02:01:49 IST, லேட்: 29.38 மற்றும் நீளம்: 71.45, ஆழம்: 10 கிமீ, இடம்: பிகானேர், ராஜஸ்தான் 236 கிமீ NW," என குறிப்பிட்டுள்ளது.
சனிக்கிழமை நிலநடுக்கம் :
முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது சரியாக அதிகாலை 1.12 மணியளவில் பூமிக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் :
கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் 43 கிமீ கிமீ தூரத்தில் பித்தோராகர் பகுதியில் லேசான நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 12.55 மணியளவில் ஏற்பட்ட ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியிருந்தது. பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை.
இதே போல வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்-தென்மேற்கில் 92 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.1 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.