உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பின் உத்தரப்பிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். மேலும், பாஜக தலைமையிலான கூட்டணி 403 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார்.
அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல் மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக வெளியிட்டது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்