20 ஆண்டு பழமையான அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL ஐ விட அதிக வாடிக்கையாளர்களை இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் பெற்று உள்ளது.
செவ்வாயன்று டெலிகாம் ரெகுலேட்டர் டிராய் வெளியிட்ட மாதாந்திர டெலிகாம் சந்தாதாரர்கள் அறிக்கையின்படி, ஜியோ தற்பபோதது 4.34 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் பிராட்பேண்ட் பிரிவில் முன்னிலை வகிக்கிறது.
இந்த பிரிவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு நடத்தும் BSNL தொலைத்தொடர்பு நிறுவனமே முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை அக்டோபரில் 4.16 மில்லியனில் இருந்து நவம்பர் மாதத்தில் 4.34 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
BSNL இன் வாடிக்கையாளர் எண்ணிக்கை அக்டோபரில் 4.72 மில்லியனில் இருந்து நவம்பரில் 4.2 மில்லியனாக குறைந்து உள்ளது. ஏர்டெல் ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 4.08 மில்லியனாக இருந்தது.
ஜியோ ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் சேவையான Jio Fibre -ஐ 2019 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஜியோ புதிதாகத் தொடங்கினாலும், செப்டம்பர் 2019 இல் BSNL 8.69 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது, ஆனால் நவம்பர் 2021 இல் பாதி வாடிக்கையாளர்களை இழந்து உள்ளது BSNL.
ஏர்டெல்லின் வயர்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2019 செப்டம்பரில் 2.41 மில்லியனில் இருந்து 2021 நவம்பரில் 4.08 மில்லியனாக 70 சதவீதம் அதிகரித்து 4.08 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சந்தாதாரர்களின் அறிக்கையின்படி, நாட்டில் பிராட்பேண்ட் வாடிக்கையாளார்கள் அக்டோபரில் 798.95 மில்லியனில் இருந்து நவம்பரில் 801.6 மில்லியன் அதிகரித்து உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 432.96 மில்லியனாகவும், அதைத் தொடர்ந்து ஏர்டெல் 210.10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுடனும், வோடாபோன் 122.40 மில்லியன் வாடிக்கையளார்களுடனும், BSNL 23.62 மில்லியன் மற்றும் ஏட்ரியா கன்வர்ஜென்ஸ் பிராட்பேண்ட் 1.98 மில்லியன் வாடிக்கையாளர்களுடனும் முன்னணி வகிக்கின்றது.
JioFiber broadband: பிராட்பேண்ட் வசதியை வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பெறும் வகையில், புதிய ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியது. இந்த ஜியோ ஃபைபர் ரூ.399 என்ற பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் உங்களுக்கு 30 Mbps வேகத்தில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது. மேலும், இதனுடன் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் வீட்டு தொலை பேசியையும் நீங்கள் பெறுவீர்கள். இந்தத் திட்டத்துடன் தொகுக்கப்பட்ட டேட்டா பயன்பாடு வரம்பற்றது. அதாவது மாதந் தோறும் 3300 GB என்ற டேட்டா பயன்பாடு உள்ளது.