திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மணமகனே உதவி செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது


திருமணம் என்றாலே கோலாகல குடும்ப நிகழ்வாக இந்தியாவில் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு குறிப்பிட்ட மதங்களும் தங்களுக்கு ஏற்ப சடங்குகளுடன் திருமணத்தை நடத்துகின்றன. புதிய வாழ்வின் தொடக்கம் என்ற செண்டிமெண்ட் அனைவருக்குமே உள்ளதால் திருமணத்தை முக்கிய நிகழ்வாகவே பார்க்கின்றனர். ஆனாலும் சில திருமணங்களில் பல ட்விஸ்ட்கள் வந்து சினிமாவை மிஞ்சும் கதைகளும் நடக்கும். அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 




உத்தரப்பிரதேசத்தின் குஷிநகரில் சுறுசுறுப்பாக நிக்கா ஒன்று நடக்கவிருந்தது. மணமகள் குடும்பத்தினர், மணமகன் குடும்பத்தினரும் ஒன்றுசேர்ந்து கல்யாண வேலைகளை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் எல்லாம் முடிந்த நிலையில் நிக்காவின் கடைசி நிமிடத்தில் இந்த திருமணத்தின் விருப்பமில்லை என போர்க்கொடி தூக்கியுள்ளார் மணமகள். அனைவரும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சிலும் மூழ்க என்ன நடக்கிறது என மணமகனே விசாரித்துள்ளார். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்த மணமகள், தான் வேறு ஒரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக போலீசாருக்கு போன் செய்த மணமகன், நடந்த விவரத்தைக் கூறி மணமகளுக்கு அவரது காதலனுடன் திருமணம் நடக்க வேண்டுமென கூறியுள்ளார். 


புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..


உடனடியாக மணமகளை கையோடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர் காவலர்கள். மணமகளின் காதலனை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்த காவலர்கள் திருமண ஏற்பாட்டை செய்துள்ளனர். அதேபோல் நின்றுபோன திருமணத்தின் மணமகன் குடும்பத்தையும், மணமகளின் குடும்பத்தினரையும் அழைத்து பஞ்சாயத்து பேசி புரிய வைத்துள்ளனர். முதலில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் திருமணத்துக்கு ஒப்புக்கொண்ட நிலையில் மணமகளுக்கும், அவரது காதலனுக்கும் காவல் நிலையத்தில் திருமணம் நடந்துள்ளது.


இது குறித்து தெரிவித்த மணமகள், தான் காதலிப்பது தெரிந்து மிரட்டி தன்னை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர் என்றார். மணமகளின் விருபத்தை தெரிந்துகொண்டு அவருக்கு உதவி செய்த மணமகனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.




எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண