உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குளிர்சாதன பெட்டி அருகே அமர்ந்ததற்காக விருந்தினர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருமணத்தை நிறுத்திய மணப்பெண்:


தகராறு அதிகரித்ததால், மணமகள் மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மணமகனை திருமணம் செய்ய மக்கள் வற்புறுத்தியும் மணப்பெண் மணமகனை திருமணம் செய்யவில்லை என்ற முடிவை மாற்றவில்லை. பின்னர் இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நள்ளிரவு வரை கூட்டம் நடந்தும், எந்த முடிவும் இல்லாமல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இரு தரப்பு மக்களும் காவல்துறையை அணுகினர்.


இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததாவது, இரு தரப்பினரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்ற போதும், தீர்வு எட்டப்படவில்லை. 


அபராதம்:


பின்னர் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அமைதியைக் குலைத்தமைக்காக, இரு தரப்பினருக்கும் ரூ.151 அபராதம் விதித்த காவல்துறையினர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர் என்றும் தகவல் தெரிவிக்கிறது. 


முஸ்தபாபாத்தைச் சேர்ந்த ஹுகும்சந்த் ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்ட மணமகனின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் தெரிவித்ததாவது, திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று மணப்பெண்ணிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், சமாதானப்படுத்த முயன்றதாகவும் மணமகன் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், திருமண வைபவம் முடியும் தருவாயில் இருந்ததால், குளிர்சாதன பெட்டிக்கு அருகில் உட்காருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது என தெரிவித்திருக்கிறார்.






காவல்துறை நடவடிக்கை:


திருமணத்திற்கு முன்பே சண்டை என்றால்,  மாமியார் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? மணப்பெண் கூறியதாக கூறப்படுகிறது. மணமகளின் குடும்ப உறுப்பினர்களும் சமாதானப்படுத்த முயன்றனர், இருப்பினும், மணமகள் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார் மற்றும் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இது தொடர்பாக உள்ளூர் போலீசார் இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுத்து 04 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது சம்பவ இடத்தில் அமைதியும், ஒழுங்கும் நிலவுவதாக தகவல் தெரிவிக்கின்றன.     




இந்நிலையில், ஒரு சிறு பிரச்னை கல்யாணத்தையே நிறுத்திவிட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை கட்டிப்பார்! கல்யாணத்தை பன்னிப்பார் ! என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருக்கின்றனர்.