உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது மதுரா மாவட்டம். இந்த மாவட்டத்தின் மதுரா நகரின் அருகே அமைந்துள்ளது ஒரு கிராமம்.
இந்த கிராமத்தில் ஏராளமோனார் வசித்து வருகின்றனர். அவர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சின்னமான யானை சின்னத்திற்கு வாக்களித்ததற்காக தாக்கியதாக அந்த குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, காவல்துறையிலும் அந்த குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் கூறும்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில நபர்கள் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. பின்னர், அந்த குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தினர் தாக்கிய நபர்களுக்கு வாக்களிக்க மறுத்ததால் அவர்கள் தாக்கியதாக அளித்த புகாரின் பேரிலே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், நாங்கள் நடத்திய விசாரணையின்போது, இந்த தாக்குதல் சம்பவம் கிரிக்கெட் மேட்ச் தகராறு காரணமாக ஏற்பட்டது என்று தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக கூறும்போது தங்களிடம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், உத்தரபிரதேச தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்காக தாக்குதலுக்கு ஆளான குடும்பத்தினரே பேசும் வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தனர். போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர். அறிக்கையில், நாங்கள் ஆதரிக்க சொன்ன வேட்பாளருக்கு பதிலாக யானைக்கு வாக்களித்தோம் என்று சொன்னார்கள் என்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமானவர் மாயாவதி. அவரது கட்சிக்கு அந்த மாநிலத்தில் உள்ள தலித் சமூகத்தினர் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ‘பிரதமர் மோடியின் பேச்சை புதின் கேட்பார்; போரை நிறுத்தச் சொல்லுங்கள்’ - உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை
மேலும் படிக்க : Today Headlines : உக்ரைன் - ரஷ்யா போர் பதட்டம்.. இந்திய அணி வெற்றி.. ஐபிஎல் தேதி அறிவிப்பு.. இன்னும் பல!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்