தமிழ்நாடு :



  • உக்ரைனில் உள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் 

  • உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : தமிழக அரசு அறிவிப்பு 

  • மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் 12 மணிநேர பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடைபெறும் : அமைச்சர் சேகர்பாபு தகவல் 

  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. 

  • எதிர்கட்சிகளை நசுக்கும், பழிவாங்கும் எண்ணத்தில் ஜெயக்குமார் கைது செய்யபட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு 


இந்தியா :



  • உக்ரைன் - ரஷ்யா விவகாரம் கவலை அளிக்கிறது : இந்த விவகாரத்தில் நடுநிலையாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

  • உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

  • உக்ரைன் நாட்டில் 200க்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க அதிகாரிகளை நியமனம் செய்தது வெளியுறவுத்துறை அமைச்சகம். உக்ரைன் எல்லை நாடுகளான ஹங்கேரி,போலந்து மூலம் இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


உலகம் :



  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை யார் எதிர்த்தாலும் பதிலடி நிச்சயம் உண்டு - ரஷ்ய அதிபர் புடின் 

  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனையாக இருக்கும் - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் 

  • உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். 

  • உக்ரைன் மீது படையெடுப்பை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு :



  • இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

  • ஐபிஎல் தொடர் 2022 : மார்ச் 26ம் தேதி தொடங்கும் எனவும், மே 29 ம் தேதி இறுதிபோட்டி நடக்கும் எனவும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர