இந்தியாவிலே அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் அந்த மாநிலத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ.க.வின் வேட்பாளராக கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த 16-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கடந்தாண்டு ஆசாத் சமாஜ் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கியது மட்டுமின்றி பா.ஜ.க. ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்.




இந்த நிலையில், ஆசாத் சமாஜ் கட்சி சார்பாக வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான பா.ஜ,க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக தனது போராட்டம் தொடரும் என்றும் கட்சி தொடங்கியவுடன் அறிவிப்பை வெளியிட்டார். 


கிழக்கு உத்தரபிதேசத்தில் அமைந்துள்ள கோரக்பூர் தொகுதியானது ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் கோட்டை என்றே கூறலாம். அந்த தொகுதியில் தற்போது பா.ஜ.க.வின் ராதாமோகன்தாஸ் அகர்வால் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார். ராமர்கோவில் விவகாரம் பெரியதளவில் பூதாகரமாக எழுந்த 1990 காலகட்டம் முதல் இந்த தொகுதியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு இந்த தொகுதியில் மிகுதியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ந் தேதி நடைபெற உள்ளது. உத்தரபிரதேசம் மட்டுமின்றி ஜார்க்கண்ட், கோவா, பஞ்சாப் உள்பட மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் கூட்டணிக்கும், ஆட்சியை தக்கவைப்பதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.விற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் 3 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து, சமாஜ்வாதியில் இணைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க : ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை; எங்களை தடுக்காதீர்கள்..பூதாகரமாக வெடிக்கும் உடுப்பி இஸ்லாமிய மாணவிகளின் பிரச்சனை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண