இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் கீழ் நேர்காணல் இல்லாமல் (நேர்காணல் விலக்கு) தங்கள் விசாக்களை புதுப்பிக்க அனுமதியளிப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவிற்கு நுழைய அனுமது நாடுகிற (Non_Immigrant Visa) ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எளிதில் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த செயல்முறை முதல் முறை விண்ணப்பதாரர்களுக்கு இல்லை. மேலும், விசாக்களை புதுபிற்கும் சில விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, மாணவர் விசா (F,J,M,) தொழில்சார் வீசா (H1,H2,H3, L ) கலாச்சாரம் மற்றும் இதர வகைகள் (O,P,Q) ஆகிய விசாக்களை புதுபிற்கும் போது நேர்காணல் தள்ளுபடிக்கு தகுதி பெற முடியும். தகுதி பெரும் விண்ணப்பதாரர்கள் தூதரக பிரிவிற்கு நேரில் தோன்ற வேண்டிய அவசியமில்லை. நேர்காணல் தள்ளுபடிக்கு தகுதிபெறா விண்ணப்பதாரர்கள் வழக்கமான வீசா செயலாக்கத்தைப் பயன்படுத்தி ஒரு நேர்காணல் திட்டமிட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் வீசா கட்டணத்தை செலுத்த வேண்டும். நேர்முக தள்ளுபடி செயல்முறை மூலம் வீசா வழங்கப்படுமென்ற உத்தரவாதம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
Russia Ukraine War: உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ரஷ்யா அறிவிப்பு !
மேலும், முந்தின விசாவனது ரத்து செய்யப்பட்டதாக இருக்கக் கூடாது, விண்ணப்பதாரர்கள் அந்தந்த நாட்டின் குடியுரிமை கொண்டவராகவும் இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் முந்தின விசாவில் அமெரிக்காவிற்கு பயணம் செய்திருக்க வேண்டும் போன்ற பொதுவான கட்டுப்பாடுகள் இந்த செயல்முறைக்கு பொருந்தும் என்று இதற்கு பொருந்தும்.
புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பையில் ஆகிய பெருநகரங்களில் தூதரகங்கள் வாயிலாக இந்தாண்டு மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட விசாக்களை நேர்காணல் இல்லாமல் புதுப்பிக்க அனுமதியளிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தூதரகத்தின் முன் உள்ள ஆய்வு அறையில் நேர்காணல் இல்லாமல் ஆவணங்களை சமர்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
Russia Ukraine War: உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ரஷ்யா அறிவிப்பு !