மத்திய உருக்குத்துறை (எஃகு)  அமைச்சர் ஆர்.சி.பி. சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 


இன்றைய தினம் மத்திய அமைச்சரவையிலிருந்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். முன்னதாக துணைக்குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த துணைக்குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (ஜூலை 5) தொடங்கிய நிலையில் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




வேட்புமனு மீதான பரிசீலனை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாளாகும். வெங்கையா நாயுடு மீண்டும் துணைக்குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பதவிக்கு பாஜக சார்பில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அடிபடுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சிறுபான்மையினர் வாக்கைப் பெற இந்த யுக்தி கைக்கொடுக்கும் என பாஜக இந்த முடிவை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை எம்.பி. பதவிகாலம் நாளை முடிவடையும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்  ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரும், மத்திய  உருக்குத்துறை (எஃகு)அமைச்சருமான ஆர்.சி.பி.சிங்  தனது மாநிலங்களவை எம்.பி. பதவிகாலம் நாளை முடிவடையும் நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்கள் இருவரும் மீண்டும் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ராஜினாமா முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






ஆர்.சி.பி.சிங்கை பொறுத்தவரை தான் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியால் புறக்கணிக்கப்படுவதாகவும், இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண