டெல்லியில் இருந்து துபாய் சென்ற போயிங் 737 விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக  பாதியிலேயே தரையிறக்கப்பட்டது.







எரிபொருள் குறைவு :


நேற்று (செவ்வாய்க்கிழமை ) மதியம் டெல்லியில் இருந்து மும்பை வழியாக  138 பயணிகளுடன் துபாய் சென்ற போயிங் 737 விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இடது புற இறக்கையில் , எரிபொருள் குறைவாக இருப்பதாக விமானிக்கு இண்டிகேஷன் வந்திருக்கிறது. இதனால் சுதாரித்த விமானி,  பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியிருக்கிறார். பயணிகள் அந்த விமானத்தில் இருந்து எந்தவொரு அவசரநிலை அறிவிப்பும் இன்றி சாதாரணமாக தரையிறக்கப்பட்டனர்.   தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. அது இண்டிகேஷன் லைட்டில் ஏற்பட்ட கோளாறு என கண்டறியப்பட்டது. ஆனாலும் உடனடியாக சரி செய்ய முடியாது என பொறியாளர்கள் கூறியதால் ,  அதன் பின்னர் ஸ்பைஸ்ஜெட், மும்பையில் இருந்து SG 9911 என்ற மாற்று விமானத்தை அனுப்பி, பயணிகளை துபாய்க்கு அழைத்துச் சென்றது. இரவும் 9.20 மணியளவில் விமானம் அங்கிருந்து புறப்பட்டதாக தெரிகிறது. வெகு நேரமாக கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மிகுந்த அதிருப்தியில் இருந்திருக்கின்றனர்.







மற்றொரு சம்பவம் :


இதே போல நேற்று குஜராத்தின் காண்ட்லாவிலிருந்து மும்பைக்கு  புறப்பட்ட  க்யூ-400 ரக விமான ஒன்றும் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது.  விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் பக்கவாட்டு  கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களுக்குள் ஸ்பைஸ்ஜெட்டில் ஏழாவது முறை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த  பாதுகாப்பு பிரச்சனைகள் பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் மீதான நம்பிக்கையை குலைப்பதாக இருக்கிறது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண