மகாராஷ்ட்ரா முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து ராணே அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. மேலும், உத்தவ் தாக்கரேவை அவமதித்தாக கூறி நாராயண் ராணேவுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், மும்மை, நாசிக், புனே பகுதிகளில் பாஜக அலுவலங்களில் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீச் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் மீது நாசீக் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை ரத்தினகிரி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது மாநில போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, மூன்றாவதாக ஒரு மத்திய அமைச்சர் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறிய செயலாகும் என்றும், இதுபோன்ற கைது நடவடிக்கையை கண்டு அச்சப்படமாட்டோம் எனவும் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேலும், விவகாரத்தில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கடுமையாக சாடினார். பாஜகவினர் பலரும் இந்த விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ABP EXCLUSIVE : திமுக கொடி கட்டும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம்- ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது
James Bond | ஜேம்ஸ் பாண்டையே தொட்ட ஸ்ட்ரிக்ட் போலீஸ்.. வைரல் வீடியோ..