மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருப்பவர் முரளிதரன். இவரின் வீடு கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் உள்ளூரில் அமைந்துள்ள அமைச்சர் முரளிதரன் வாடகை விடுதியின் பின்புறம் அவரின் அலுவலகமும் அமைந்துள்ளது. 


இவரது இல்லத்தின் ஜன்னல் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி ஜன்னல்  உடைந்திருப்பதை அவரது அலுவலக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 


ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், மருத்துவக் கல்லூரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அந்த இடத்தில் ரத்தத் துளிகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தின் சிசிடிவியை சேகரித்து காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிடைத்த தகவல்களின்படி, இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 


ஒரு தடயவியல் குழுவும் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய உள்ளது. கொள்ளைச் சம்பவங்கள் குறித்து இதுவரை எந்த தடயமும் இல்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்திய அமைச்சராக பாபுல் சுப்ரியோ பதவி வகித்தபோது அவர் மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மத்திய கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பாபுல் சுப்ரியோ. இவர் மேற்குவங்க மாநிலம் அசன்சால் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து தனது கட்சியினரை விடுவிப்பதற்காக தொண்டர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.


அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வழியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அசன்சாலில் திரிணமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் மலய் கடாக்கின் வீட்டின் அருகே, அமைச்சரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.


இதில், அமைச்சரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. அமைச்சரை நோக்கி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கற்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்கினர். இதில் அமைச்சர் காயமடைந்ததாக தகவல் வெளியானது.


 






திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், தற்போது மாநில அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.