Uttarkhand Accident: உத்தர காண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்த விழுந்த இடத்தில் தொழிலாளர்கள் 40 பேர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்கப்பாதை இடிந்த விழுந்து விபத்து:
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் - கர்னாபிரயாக் இடையே ரயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதோடு, உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல், சுரங்கம் அமைக்கும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நான்கரை கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 40 பேர் சிக்கி உள்ளதாக தெரிகிறது.
40 பேர் சிக்கி தவிப்பு:
இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட நிர்வாககும், உத்தரகாசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, சுரங்கப்பாதை அமைக்கும் அமைப்பான தேசிய நெடுங்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் ஊழியர்களும் சம்பவ இடத்தில் இருக்கின்றனர். சுரங்கப்பாதையில் மேல் பகுதியை இயந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து ஆக்ஸிஜன் குழாய்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தற்போதைய நிலவரப்படி, இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளை கவனித்து வரும் அதிகாரிகளின் கூற்றுப்படி, "சுரங்கப்பாதையில் சுமார் 40 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை பத்திரமாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் உள்ளனர். இதுவரை உயிர்சேதம் எதுவும் இல்லை. விரைவில் அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்போம். அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பு இருக்கின்றனர்" என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க