ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்கு சென்ற பிரதமர் மோடி பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






இதுகுறித்து ட்வீட் செய்த பிரதமர் மோடி, “எங்கள் துணிச்சலான பாதுகாப்புப் படைகளுடன் தீபாவளியைக் கொண்டாட ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சாவை அடைந்தேன்” என பதிவிட்டுள்ளார். 


முன்னதாக, தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.” என பதிவிட்டுள்ளார்.