Karnataka : கர்நாடகாவில் மழை வர வேண்டும் என்பதற்காக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒரு செயலை செய்துள்ளனர். 


வினோத சடங்கு


கர்நாடகாவில் கடந்த ஆண்டை பெய்த மழையை விட இந்தாண்டு பொதிய மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் குறிப்பிட்ட கிராமங்கள் வருடம்தோறும் மழை வர வேண்டி சில வழிபாடுகளை செய்து வருகின்றனர்.  அதன்படி, சமீபத்தில் கூட கர்நாடகாவின் லட்சுமேஸ்வராவில் உள்ள மாயகிரி தெருவில் வசிக்கும் மக்கள் இனிப்புகளை செய்து, மங்கள இசைகளை இசைத்து பொம்மைகளுக்கு திருமணம் செய்து, பாரம்பரியமான திருமண சடங்குகளை மேற்கொண்டனர்.


இந்த திருமணத்தை நடத்தி வைக்க தீட்சகரும் அழைக்கப்பட்டனர். இதுபோன்று பல ஆண்டுகளாகவே அந்த பகுதியில் நடந்து வரும் ஒரு சடங்கு ஆகும். எனவே பொம்மைகளுக்கு திருமணம் செய்த ஏழு நாட்களுக்கு உள்ளாகவே அப்பகுதியில் பலத்த மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனை போன்று தற்போது மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது.   


இரண்டு சிறுவர்களுக்கு திருமணம்


கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கங்கனஹள்ளி கிராமத்தில்  மழை வர வேண்டி வினோத வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, சிறுவர்கள் 2  பேருக்கு பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமணம் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி உள்ளனர். இதில், ஒரு சிறுவனுக்கு பெண் வேடமிட்டு மணமகள் போலவே அலங்கரித்து இருந்தனர். 


இவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்தனர். இதன் பின்பு, கிராமவாசிகள் சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தனர். இந்த விருந்தில் கிராமவாசிகள் அனைவரும் பங்கேற்று இரண்டு சிறுவர்களையும் ஆசிர்வதித்தனர். மழை வர வேண்டும் என்பதற்காக இதுபோன்று அப்பகுதியில் கிராம மக்கள் வினோத செயல்களில் அடிக்கடி செய்து வருகின்றனர்.


இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு பொதுமான மழை பெய்யவில்லை. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம். எனவே மழை வர வேண்டி நாங்கள் இதுபோன்று வழிபாடுகளை ஆண்டுதோறும் செய்து வருகிறோம். தற்போது  இரண்டு சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். இதனால் மழை வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தனர்.