Flipkart: இனி ப்ளிப்கார்ட்டில் உடனே ரிட்டன் செய்யலாம்.. வந்தது 'ஓபன் பாக்ஸ் டெல்வரி' ஆப்ஷன்...! எப்படி?

பிளிப்கார்ட்டில் 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' (Open Box Delivery) என்ற வசதியை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

Continues below advertisement

Flipkart Delivery : பிளிப்கார்ட்டில் 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' (Open Box Delivery) என்ற வசதியை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. 

Continues below advertisement

ஆன்லைன் ஷாப்பிங்

முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஆனாலும் அதனை சேமிக்கும் நோக்கில், பொதுமக்கள் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வந்தனர். அதோடு, எந்த ஒரு பொருளை வாங்கும்போதும் நேரடியாக கடைக்குச் சென்று பொருளை பார்த்து, விலைபேசி வாங்குவதில் தான் ஒரு திருப்தியும் கொண்டிருந்தனர். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதை போல, மனித வாழ்வியலையே இணைய சேவை மாற்றியுள்ளது.

அதற்கு உதாரணமாக தான், சோம்பேறித்தனம் அதிகமாகி ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என வீட்டை விட்டு கூட வெளியே வராமல், ஆன்லைன் மூலமே அனைத்து பொருட்களையும் வாங்கி குவித்து வருகின்றனர். 

நிறுவனங்களும் அதற்கேற்றப்படி பயனாளர்களின் தேவையை உணர்ந்து பண்டிகை காலம், விழாக் காலங்களில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. ஆன்லைன் வணிகத்தில் ஆர்டர் செய்ததற்கு மாறாக வேறொரு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்கிறோம். இதற்கு ஏதுவாக பிளிப்கார்ட் நிறுவனம் ’ஓபன் பாக்ஸ் டெலிவரி' என்ற புதிய ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. 

ஓபன் பாக்ஸ் டெலிவரி 

வாடிக்கையாளர் பொருளை ஆர்டர் செய்தவுடன் ஓபன் பாக்ஸ் டெலிவரி வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதியை பயன்படுத்தி பெறுவதற்கு ஆர்டர் செய்தவுடன் அவர்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அளிக்கப்படும். இதனை அடுத்து, ஆர்டர் செய்த பொருளை உறுதிப்படுத்தும் விதமாக, டெலிவரி செய்யப்படும் தேதி, ஆர்டர் செய்த பொருள் குறித்த விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். அதன்பின், வாடிக்கையாளர்களின் முகவரிக்கு பொருட்களை பிளிப்கார்ட் டெலிவரி பார்டனர் கொண்டு வந்து சேர்ப்பார்.

அப்போது, ஆர்டர் செய்த பொருள் சரியாக வந்துள்ளதாக என்பதை சரிபார்க்க ஏதுவாக ஓபன் பாக்ஸ் டெலிவரி ஆப்ஷனை வாடிக்கையாளர் பயன்படுத்தி, ஆர்டர் செய்த பொருளை டெலிவரி பார்ட்னர் முன்பே பிரித்து பார்க்கலாம். அதன்பின், ஆர்டர் செய்த பொருள் சரியாக இல்லாமல் இருந்தால், அதனை உடனேயே திருப்பி அனுப்பலாம்.

கட்டணம் உள்ளதா?

இந்த ஓபன் பாக்ஸ் டெலிவரி முறையானது எந்தவிதமான கட்டணங்களும் இல்லாமல் வழங்கப்படுகிறது. இந்த வசதி மூலம் வாடிக்கையாளர் தங்கள் ஆர்டர் செய்த பொருளை உறுதிப்படுத்த வழிவகை செய்கிறது. ஆர்டர் செய்த பொருள் தவறாக இருந்தால், அதை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனேயே திருப்பி அனுப்பி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் இல்லாத ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும் என்னபது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

New Electricity rules: மக்களுக்கு விழுந்த பேரிடி.. 25% உயரும் மின்சார கட்டணம்...மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு..!

Continues below advertisement
Sponsored Links by Taboola