Twitter CEO Parag Agarwal : ட்விட்டரின் புதிய CEO பரக் அக்ராவல் ட்வீட்ஸ் இப்போது வைரல்.. ஏன் தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ. பரக் அக்ராவல் 10 ஆண்டுகளுக்கு முந்தைய ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான ஜேக் டோர்சியின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய சி.இ.ஓ.வாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அக்ராவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ அவர்கள் முஸ்லீம்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் வேறுபாடு காட்டமாட்டார்கள் என்றால், நான் ஏன் வெள்ளையர்களையும், இனவாதிகளையும் வேறுபடுத்த வேண்டும்?” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி “நான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து சைவ உணவு உண்கிறேன். தாவரங்களைப்போல டல்லாக இருக்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்தாண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தாண்டு, மற்றவர்களைப் பாதுகாப்பதற்கும் சேவை செய்வதற்கும் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை பணயம் வைக்கும் அனைவருக்கும் வைக்கும் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தேன். ட்விட்டரில் இந்த ஹீரோக்களில் எங்கள் டேட்டா சென்டர்களை இயக்கி வைத்திருக்கும் அணியினர் அடங்குவர். எங்கள் ஒன் டீம் சேவையைத் தக்கவைத்து மேம்படுத்த நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றுள்ள பரக் அக்ராவலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்