Today Headlines : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...! மீண்டும் கனமழை...! கான்பூர் டெஸ்ட் டிரா...! - தலைப்புச்செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
  • சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வுமையம் தகவல்
  • தெற்கு அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
  • 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று கணிப்பு
  • தமிழ்நாட்டில் டிசம்பர் 3-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
  • கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
  • கடலூரில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் – வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை
  • ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை விடுவித்தது தமிழக அரசு
  • உண்மைக்கு புறம்பாக தன்மீது அவதூறு கூறிய கேரள பெண் மீது மானநஷ்ட வழக்கு – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியா :

Continues below advertisement

  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது வேளாண் சட்ட ரத்து மசோதா
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து
  • ஒமிக்ரான் வைரஸ் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
  • வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டாலும் போராட்டத்தை தொடரும் விவசாய சங்கங்கள்
  • நிலுவையில் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூரவமாக அறிவிக்க வேண்டும் – விவசாயிகள் சங்கம்
  • இந்தியாவில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி
  • பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி – முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்

உலகம் :

  • ஒமிக்ரான் வைரஸ் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு
  • ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜேக் டார்ஸி ராஜினாமா : புதிய சி.இ.ஓ.வாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அகர்வால் தேர்வு
  • கொரோனா கால போனஸ், ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வு – ஊழியர்களுக்கு அறிவித்தது ஜெர்மனி அரசு

விளையாட்டு :

  • இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டை போராடி டிரா செய்தது நியூசிலாந்து
  • தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழக அணி தெலுங்கானாவை 20-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தல்
Continues below advertisement
Sponsored Links by Taboola