உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ட்விட்டரில் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பலரும் விழிப்புணர்வு!


உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2022 


புகையிலையால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்யும் வகையில், உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி இந்த நாளை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.


உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி நம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில் புகையிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகையிலையால் ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணிக்கின்றனர்.


 






புகையிலை எனும் மனிதகுல எதிரி!


தவிர, புகையிலையானது அதன் சாகுபடி, உற்பத்தி, விநியோகம், நுகர்வு மற்றும் நுகர்வுக்கு பிந்தைய கழிவுகள் போன்ற செயல்பாடுகளின்போதும் மனிதகுலத்துக்கு பெரும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில், புகையிலை பயன்பாட்டின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ட்விட்டர் முழுவதும் புகையிலை எதிர்ப்பு பதிவுகள் பகிரப்பட்டன.


 






 






உலக சுகாதார அமைப்பு கவலை


இது குறித்து பதிவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, “இது உலக புகையிலை எதிர்ப்பு நாள்! புகையிலை நம்மையும் நமது பூமியையும் கொன்று வருகிறது, புகையிலை ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியன் மக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், புகையிலை மற்றும் நிகோடின் பொருள்கள், விற்கப்படுவதற்கு முன்பே புகையிலை தொழில் சார்ந்த பாதையை நமது சுற்றுச்சூழலில் விட்டுச்செல்கிறது” எனக் கவலை தெரிவித்துள்ளது.


 






மணல் சிற்ப விழிப்புணர்வு


இந்நிலையில், முன்னதாக மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தான் உருவாக்கிய புகையிலை எதிர்ப்பு சிற்பத்தை பகிர்ந்து விழிப்புணர்வில் ஈடுபட்டார்.


 






மேலும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், நெட்டிசன்களும் புகையிலை எதிர்ப்பு பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.