இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக திகழ்வது ரயில்வே போக்குவரத்து ஆகும். தொலைதூர மற்றும் குறுகிய அளவு என பல்வேறு விதமாக ரயில்வே சேவை வழங்கப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ வரை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஒன்று பயணிகள் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருவது வழக்கம்.


பயணியை தாக்கிய டிடிஆர்:


இந்த நிலையில், இன்று வழக்கம்போல இந்த ரயில் பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் சரியாக உத்தரபிரதேசத்தில் உள்ள கோந்தாவில் இருந்து பாரபங்கி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்துள்ளார்.


அப்போது, அவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியை பளார் என்று அறைந்தார். மேலும், அந்த பயணியின் துண்டை இழுத்து அவரை துன்புறுத்தினார். அந்த பயணியை அவர் தொடர்ந்து அறைந்ததை அங்கே இருந்த மற்றொரு பயணி வீடியோவாக எடுத்தார்.


அந்த டிக்கெட் பரிசோதகர் அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததுடன், வீடியோ எடுத்தவரின் செல்போனை பறிக்க முயற்சித்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






பணியிடை நீக்கம்:


இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தற்போது அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் அந்த டிக்கெட் பரிசோதகர் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. அந்த வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவர் வைத்திருந்ததால் டிக்கெட் பரிசோதகர் அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியது. அவர் மீது ரயில்வே துறை சார்பில் கடுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: PM Modi Visit Schedule: ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மொத்த ப்ளான் இதுதான்!


மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!