தென்னிந்தியாவின் முக்கியமான நகரமாக திகழ்வது பெங்களூர். பெங்களூருக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்தும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு இன்று வழக்கம்போல விமானங்கள் இயக்கப்பட்டது.
நடுவானில் இயந்திர கோளாறு:
அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்தனர். ஆனால், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினர். ஏர் இந்தியாவிற்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த 167 பயணிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.
திடீரென நடுவானில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்தனர். பெங்களூருக்கு விமானத்தை கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்த விமானிகள், சமயோசிதமாக செயல்பட்டு அருகில் இருந்த திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர்.
167 பயணிகள்:
பின்னர், விமானத்தில் இருந்த 167 பயணிகளும் அவசர, அவசரமாக கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாற்றை தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 167 பயணிகளும் விமானக்கோளாறு சரி செய்த பின்னர், அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது வேறு விமானம் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்படவும் வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு நோக்கி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற விமானம் நடுவானில் எந்திர கோளாறால் திருச்சியிலே தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எந்தவித சேதாரமுமின்றி உயிர்தப்பினர்.
மேலும் படிக்க: “உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
மேலும் படிக்க: தாயின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட மகன்..! நெல்லையில் பயங்கரம்..!