ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை, தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதாக  எம். பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேசினார்.


நாடாளுமன்றத்தில் இன்று அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் தங்களது அனல்பறக்கும் விவாதங்களை முன்வைத்தனர். 


அப்போது பேசிய ராகுல்காந்தி “அமைச்சர்களே, பாஜக எம்.பிக்களே அஞ்சாதீர்கள். நீங்கள் அரசியலமைப்பு பதவியில் உள்ளீர்கள். அவதூறு, வெறுப்பு இல்லாமல் எதை வேண்டுமானாலும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. சபாநாயகர் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். சபாநாயகர் என்ன சொல்கிறாரோ அதுவே நாடாளுமன்றத்தின் இறுதியான வார்த்தை. மோடிக்கு கைகொடுக்கும்போது முதுகு வளைந்து சபாநாயகர் வணக்கம் சொல்வது ஏன்? எதிர்க்கட்சித் தலைவரான பிறகு எந்தக் கட்சியினருக்கு பாதிப்பு வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது” எனத் தெரிவித்தார். 


ராகுல்காந்தி பேசும் போது ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் திடீரென குறுக்கிட்டு பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. 


சிவபெருமானை பற்றி பேசுவது அவதூறா? பாஜகவினருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லாததால் ராகுல்காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் தெரிவித்தார்.


இதையடுத்து அனல்பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ”நீங்கள் மைனாரிட்டி ஆகிவிட்டீர்கள் என்பதை இன்னும் உணரவில்லை. எதிக்கட்சிகளை ஒன்றும் செய்யமுடியாது. பாஜக மைனாரிட்டி அரசு எதிர்க்கட்சிகளை எதுவும் செய்ய முடியாது. நெருபாற்றில் நீந்தி வந்த எங்களை எதுவும் செய்ய முடியாது.  இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார்.


2019 நாடாளுமன்ற உறுப்பினராக முதல் முதலில் பேசியபோது சர்வாதிகாரத்தின் ஏழு குறியீடுகள் என்பதை பற்றி பேசினேன். பெண்களை கண்டு பாஜக அச்சப்படுகிறது. அதனால்தான் மகளிர் இட ஒதுக்கீட்டை நீங்கள் அமல்படுத்தவில்லை. மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல்.






ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை, தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதாக  எம். பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேசினார்.