உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா ரயில் விபத்து இன்னும் மக்கள் மனதில் வடுவாக இருக்கிறது. அதில் இருந்து ரயிலில் பயணிக்கவே மக்கள் ஒரு விதமான அச்சத்துட்டன் இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பேசி வந்தனர்.
இதனிடையே, அண்மைக்காலமாக ரயில் விபத்து அதிகரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. முன்னதாக மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று (நவம்பர் 15) மாலை பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் சிறப்பு ரயில் ஒன்று சராய் பூபத் ஸ்டேஷன் வழியாகச் சென்றபோது, ஸ்லீப்பர் கோச்சில் இருந்து புகை வருவதை அந்த ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்துள்ளார். உடனே அவர் அந்த தகவலை ரயிலின் லோலோ பைலட்டுக்கும், அந்த ரயில் நிலைய காவல் துறையினருக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்ததும் உடனே ரயில் நிறுத்தப்பட்டது.
உயிர் தப்பிய பயணிகள்:
ரயில் பெட்டியில் தீ பிடித்ததை கண்ட பயணிகள் உடனே ரயில் இருந்து குதித்து உயிர தப்பினர். முதல் கட்ட தகவல்களின் படி ரயிலில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், பற்றி எரியும் தீயை அணைக்க தேவையான முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கூறிகின்றன.
தற்போது வரையிலும் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. மேலும், ரயில்வே போலீஸ் மற்றும் காவல் துறையினர் ரயில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்று விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Uttarkhand Tunnel Collapse: உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல்...என்னதான் நடக்கிறது?
மேலும் படிக்க: Jammu Kashmir Bus Accident: ஜம்மு & காஷ்மீரில் கோர விபத்து - பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு!