கடும் குளிர்:


டெல்லி உள்பட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் உறைய வைக்கும் பனியால் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு நாள்களுக்கும், இந்த கடும் பனி தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக குளிர் அலை வீச தொடங்கி இருப்பதால் அங்கு தட்பவெப்ப நிலை குறிப்பிட தகுந்த அளவில் குறைந்துள்ளது.


குறிப்பாக, டெல்லியில் தட்பவெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கடும் குளிர் வீசியது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. டெல்லி, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.


300 ரயில்கள் சேவை ரத்து:


பீகாரின் பாட்னாவில், கடும் குளிரைக் கருத்தில் கொண்டு ஆண்டு இறுதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 330 ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இன்று முற்றிலுமாகவும் பகுதியாகவும் ரத்து செய்துள்ளது. பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மொத்தமுள்ள 331 ரயில்களில் 268 ரயில்கள் முற்றிலுமாகவும் 63 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் வாரணாசி, பதான்கோட், கோலாப்பூர், மிராஜ், சாங்லி மற்றும் பல இடங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் அடங்கும். பனிமூட்டம் மற்றும் குளிர் அலைகள் காரணமாக, பல ரயில்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.


பணம் திரும்ப அளிப்பு:


ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட் தானாக ரத்து செய்யப்பட்டு, அவர்களின் கணக்குகளில் பணம் திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.


இன்று ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்:


00107 , 01513 , 01605 , 01606 , 01607 , 01608 , 01609 , 01610 , 01620 , 01623 , 01625 , 01626 , 01823 , 01824 , 02547 , 02548 , 02549 , 02550 , 03085 , 03086 , 03342 , 03343 , 03344 , 03359 , 03360 , 03591 , 03592 , 04029 , 04030 , 04041 , 04042 , 04148 , 04149 , 04319 , 04320 , 04335 , 04336 , 04353 , 04354 , 04379 , 04380 , 04383 , 04384 , 04403 , 04404 , 04408 , 04421 , 04424 , 04464 , 04549 , 04550 , 04568 , 04577 , 04601 , 04602 , 04647 , 04648 , 04901 , 04902 , 04909 , 04910 , 04912 , 04913 , 04916 , 04919 , 04927 , 04938 , 04941 , 04946 , 04950 , 04953 , 04958 , 04959 , 04961 , 04963 , 04964 , 04974 , 04975 , 04977 , 04978 , 04987 , 04988 , 04997 , 04999 , 05000 , 05019 , 05020 , 05035 , 05036 , 05039 , 05040 , 05091 , 05092 , 05093 , 05094 , 05155 , 05156 , 05209 , 05210 , 05257 , 05258 , 05259 , 05260 , 05261 , 05262 , 05334 , 05453 , 05454 , 05459 , 05460 , 05470 , 05471 , 05517 , 05518 , 05591 , 05592 , 05607 , 06802 , 06803 , 06921 , 06922 , 06923 , 06924 , 06925 , 06926 , 06934 , 06937 , 06958 , 06959 , 06964 , 06967 , 06977 , 06980 , 06991 , 06994 , 06995 , 06996 , 07593 , 07596 , 07765 , 07766 , 07793 , 07794 , 07795 , 07853 , 07893 , 07894 , 07906 , 07907 , 08167 , 08168 , 08169 , 08170 , 08171 , 08172 , 08861 , 08862 , 09108 , 09109 , 09110 , 09113 , 09369 , 09370 , 09476 , 09481 , 09483 , 09484 , 09491 , 09492 , 10101 , 10102 , 11124 , 12033 , 12034 , 12172 , 12241 , 12242 , 12357 , 12367 , 12370 , 12398 , 12506 , 12529 , 12530 , 12583 , 12584 , 12596 , 12873 , 12874 , 12988 , 13020 , 13305 , 13309 , 13310 , 13345 , 13346 , 13349 , 13350 , 13553 , 14003 , 14005 , 14006 , 14213 , 14214 , 14217 , 14218 , 14229 , 14231 , 14232 , 14235 , 14236 , 14265 , 14266 , 14307 , 14308 , 14505 , 14506 , 14524 , 14617 , 14618 , 14674 , 15035 , 15036 , 15053 , 15081 , 15082 , 15084 , 15125 , 15126 , 15128 , 15129 , 15130 , 15160 , 15203 , 15204 , 15619 , 15910 , 17003 , 17004 , 17011 , 17012 , 17036 , 17234 , 18635 , 18636 , 20927 , 20928 , 20948 , 20949 , 22441 , 22442 , 25035 , 25036 , 31411 , 31414 , 31423 , 31432 , 31711 , 31712 , 36011 , 36012 , 36031 , 36032 , 36033 , 36034 , 36035 , 36036 , 36037 , 36038 , 36071 , 36072 , 36085 , 36086 , 36827 , 36840 , 37305 , 37306 , 37307 , 37308 , 37319 , 37327 , 37330 , 37338 , 37343 , 37348 , 37411 , 37412 , 37415 , 37416 , 52538 


ரயில் ரத்து செய்யப்பட்டால், ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrail.gov.in/mntesஇல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.