தாயைச் சந்தித்த பிரதமர்:


பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்ப்பதற்காக பிரதமர் மோடி இன்று குஜராத் அகமதாபாத்திற்கு சென்றுள்ளார்.


மாலை 4 மணி அளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் தனது தாயாரை பார்த்துவிட்டு 5:30 மணி அளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தன்னுடைய தாயாருடன் பிரதமர் இருந்துள்ளார்.


மருத்துவமனையில் பிரதமரின் தாய்:


ஹீராபென் மோடியின் உடல்நிலை குறித்து யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு ஜூன் மாதம் 99 வயதை எட்டிய ஹீராபெனின் உடல் நிலை சீராக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பாஜக எம்எல்ஏக்கள் தர்ஷனாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். திடீர் உடல் நலக்குறைவாக் பாதிக்கப்பட்ட ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள  யூ. என். மேத்தா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


99 வயதாகும் ஹீராபென் குஜராத்தில் உள்ள ரைசன் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில்,  குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக குஜராத் சென்றிருந்த மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்து அவரிடம் ஆசிப் பெற்றார். அவருடன் நேரம் செலவிட்டு தேநீர் அருந்தினார். 


சகோதரருக்கு விபத்து:


தாயார் உடல்நலம் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார். கடும் பணி சுமைக்கு மத்தியிலும் பிரதமர் மோடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் தாயாரைச் சந்திந்து ஆசி பெற்று வருகிறார். 


மோடியின் தாயார் உடல் நலம் பெற வேண்டி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். கட்சித்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 


கர்நாடகம் மாநிலம் மைசூரூ அருகே உள்ள பந்திப்பூர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி காயமடைந்துள்ளார்.


 






பிரதமரின் சகோதரர், அவரது மனைவி, அவர்களது மகன் , மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூரூவில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்றகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானாது. 


இந்த விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் J.S.S தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.