காலைநேர நடைபயிற்சிக்காக உதவி கமிஷனர் ஒருவர் 2 மணி நேரம் பாதையை மறித்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
ரோட்டை தனி நபராக ஆக்கிரமித்த போலிஸ்
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த போக்குவரது உதவி கமிஷனர் வினோத் பிள்ளை என்பவர், காலை நேரம் க்யூஸ் வாக் வே எனும் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக காலை நேரத்தில் இவர் நடைபெயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் க்யூஸ் வாக் வே பகுதியில் பொது மக்கள் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்டு பாதை தடை செய்யப்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க: Viral Video:பரபரப்பான சாலையை கூட்டித் தள்ளிய போக்குவரத்துக் காவலர்.... சல்யூட் அடிக்கும் நெட்டிசன்கள்!
Swiggy Delivery : Swiggy ஊழியரை தாக்கிய காவலர்.. ஃபோன் போட்ட டிஜிபி சைலேந்திரபாபு.. என்ன நடந்தது?
சிரமத்தில் பொது மக்கள்
மேலும், போக்குவரத்து வேறு வழிக்கு மாற்றப்பட்டு, அப்பகுதி மக்களும், பள்ளிக் குழந்தைகளும் வேறொரு பாதையில் சிரமப்பட்டு வாகனங்களில் ஏறும் காட்சியும் முன்னதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து உதவி கமிஷனர் வினோத் பிள்ளைக்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி, தமிழ்நாடு சம்பவங்கள்
முன்னதாக இதே போல் டெல்லி தியாகராஜா மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது செல்ல நாயை நடைபயிற்சி கூட்டிச் செல்ல, மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், அப்பகுதி வருவாய்த் துறை செயலர் உள்ளிட்டோர் டெல்லியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல், தமிழ்நாட்டில் கோவையில் ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் நபரை போக்குவரத்து காவலர் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி டெலிவரி நபரான மோகனசுந்தரத்திடம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஃபோனில் பேசியதும், போக்குவரத்துக் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒரே கல்லில் இரண்டு மாங்கா... இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் செக்...பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்