ஒடிஷா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் புதிய உடை வாங்குவதற்காக பணம் தர மறுத்த தனது தாயைக் கொன்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒடிஷாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள உபரபரடா கிராமத்தில் உள்ள நாயகோடே காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஊரின் ராஜா நிகழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்குப் புதிய உடைகளை வாங்குவதற்காக 10 வயது சிறுவன் தனது தாயிடம் 500 ரூபாய் பணம் கேட்டுள்ளான். பள்ளிக்குச் செல்லாமல் இடையில் நின்ற மகனுக்குப் பணம் அளிக்க தாய் முகா சாந்தா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய நாயகேடே காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுவர்ணமணி ஹேம்ப்ராம், `முகா சாந்தா தனது மகனின் தொடர் கோரிக்கைகளையும் புறந்தள்ளி, பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தனது தாயைக் கோடாரி மூலம் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தாய் மரணித்த பிறகும், அவரது தொண்டையைக் கத்தியால் கிழிக்க மகன் முயன்றுள்ளான்’ எனக் கூறியுள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுவனம் கடந்த ஆண்டு முதல் பள்ளி செல்வதை நிறுத்தியுள்ளான். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தச் சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நாயகோடே காவல் நிலைய அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்